தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/மும்பை அணி அசத்தல் வெற்றி: பெங்களூரு ஏமாற்றம்

மும்பை அணி அசத்தல் வெற்றி: பெங்களூரு ஏமாற்றம்

மும்பை அணி அசத்தல் வெற்றி: பெங்களூரு ஏமாற்றம்


ADDED : மார் 02, 2024 10:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 10:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெண்களுக்கான பிரிமியர் லீக் போட்டியில் அசத்திய மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது.

இந்தியாவில் பெண்களுக்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் 2வது சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

பெங்களூரு அணிக்கு கேப்டன் மந்தனா (9), சோபி டெவின் (9) ஏமாற்றினர். அடுத்து வந்த மேகனா (11), ரிச்சா கோஷ் (7), மோலினக்ஸ் (12) நிலைக்கவில்லை. ஜார்ஜியா வேர்ஹாம் (27) ஓரளவு கைகொடுத்தார். தனிநபராக அசத்திய எல்லிஸ் பெர்ரி நம்பிக்கை தந்தார்.

பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 131 ரன் எடுத்தது. பெர்ரி (44), ஷ்ரேயங்கா (7) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை அணி சார்பில் ஸ்கிவர்-பிரன்ட், பூஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு யாஸ்திகா பாட்யா (31), ஹேலி மாத்யூஸ் (26), கேப்டன் நாட் ஸ்கிவர்-பிரன்ட் (27) நம்பிக்கை தந்தனர். வேர்ஹாம் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அமேலியா கெர் வெற்றியை உறுதி செய்தார். மும்பை அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கெர் (40), பூஜா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us