ADDED : நவ 12, 2024 10:42 PM

புதுடில்லி: டில்லி அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக முனாப் படேல் நியமிக்கப்பட்டார்.
இந்தியாவில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல்., 18வது சீசன் நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள டில்லி அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக, முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முனாப் படேல் 41, நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் டில்லி அணியின் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானி, கிரிக்கெட் இயக்குனராக வேணுகோபால் ராவ் அறிவிக்கப்பட்டனர்.
இதுவரை 70 ஒருநாள் போட்டியில் (86 விக்கெட்) விளையாடிய முனாப் படேல், 2011ல் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். தவிர இவர், 13 டெஸ்ட் (35 விக்கெட்), 3 சர்வதேச 'டி-20' (4 விக்கெட்) போட்டியிலும் களமிறங்கினார். ஐ.பி.எல்., அரங்கில் ராஜஸ்தான் (2008-10), மும்பை (2011-13), குஜராத் (2017) அணிகளுக்காக விளையாடிய இவர், 65 போட்டியில், 76 விக்கெட் சாய்த்துள்ளார்.

