/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கவுதம் காம்பிருக்கு புதிய பதவி: இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்பு
/
கவுதம் காம்பிருக்கு புதிய பதவி: இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்பு
கவுதம் காம்பிருக்கு புதிய பதவி: இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்பு
கவுதம் காம்பிருக்கு புதிய பதவி: இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்பு
ADDED : மே 24, 2024 10:57 PM

மும்பை: இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் காம்பிர் நியமிக்கப்படலாம்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் உள்ளார். இவரது பதவிக் காலம் வரும் 'டி-20' உலக கோப்பை தொடருடன் (ஜூன் 2-29) நிறைவு பெறுகிறது. மீண்டும் பயிற்சியாளராக இவருக்கு விருப்பம் இல்லை. இதையடுத்து புதிய பயிற்சியாளரை கண்டறியும் பணியில் இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) இறங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்களான பாண்டிங், லாங்கர், நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங் பெயர்கள் அடிபட்டன. இவர்களுக்கு இந்திய அணியுடன் ஒரு ஆண்டில் 10 மாதங்கள் செலவிட விருப்பம் இல்லை. ஐ.பி.எல்., அணிகளுடன் இரண்டு மாதம் செலவிட்டு நல்ல வருமானம் பார்த்தால் போதும் என நினைக்கின்றனர்.
பாண்டிங் கூறுகையில்,''இந்திய தரப்பில் என்னை அணுகினர். எனது மகன் கூட பயிற்சியாளர் பதவியை ஏற்கும்படி கூறினான். எனது வாழ்க்கை முறைக்கு இப்பதவி 'செட்' ஆகாது,'' என்றார்.
லாங்கர் கூறுகையில்,''இந்திய பயிற்சியாளராக பணியாற்றுவதில் நெருக்கடி அதிகம். இப்போதைக்கு ஆர்வம் இல்லை,'' என்றார்.
ஜெய் ஷா மறுப்பு: பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா கூறுகையில்,''நான் அல்லது பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் யாரும் பயிற்சியாளர் பதவிக்காக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களை அணுகவில்லை. இது தொடர்பான செய்தி தவறானது. சரியான பயிற்சியாளரை கண்டறிவது நுணுக்கமான பணி. இந்திய கிரிக்கெட் கட்டமைப்பு பற்றி நன்கு தெரிந்த ஒருவரை தேடி வருகிறோம். இந்தியாவின் உள்ளூர் போட்டிகள் குறித்து முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியவராக இருக்க வேண்டும்,'' என்றார்.
லட்சுமண் தயக்கம்
ஜெய் ஷா கருத்துப்படி இந்திய முன்னாள் வீரர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ள லட்சுமண், அனுபவ நெஹ்ராவுக்கு விருப்பம் இல்லை. கவுதம் காம்பிருக்கு (செல்லமாக 'ஜிஜி') வாய்ப்பு தேடி வரலாம். மூன்றரை ஆண்டு கால பயிற்சியாளர் பதவிக்கு மே 27க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை யாரும் விண்ணப்பிக்கவில்லை.
பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''பயிற்சியாளர் பதவியை ஏற்கும்படி லட்சுமணிடம் ஜெய்ஷா வலியுறுத்த வேண்டும். டெஸ்ட் போட்டியில் சாதிக்க இவரது அனுபவம் உதவும். லட்சுமண் மறுக்கும் பட்சத்தில் காம்பிர் வாய்ப்பு பெறலாம்,''என்றார்.