UPDATED : அக் 15, 2026 12:00 AM
ADDED : அக் 14, 2026 08:18 PM

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவராக பிரக்ஞான் ஓஜா தேர்வு செய்யப்பட உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு (1 தலைவர்+4 உறுப்பினர்) தலைவராக இருந்த அகார்கர் பதவிக்காலம் சமீபத்தில் (அக். 4) முடிந்தது.
தெற்கு மண்டல, தேர்வுக்குழு உறுப்பினர், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்ஞான் ஓஜா, 40, (24 டெஸ்ட், 18 ஒருநாள், 6 ‘டி–20’) தற்காலிக தலைவராக இருந்தார்.
அகார்கர் தரப்பில் இருந்து, மேற்கு மண்டலத்தின் சார்பில் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, நேற்று கடைசி நாள் என்ற நிலையில், தலைவர் பதவிக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
இதனால், பிரக்ஞான் ஓஜா புதிய தேர்வுக்குழு தலைவராக தேர்வு செய்யப்படுவது உறுதியானது. இவர், மீதமுள்ள பதவிக் காலத்தை (வரும் 2028 வரை) தலைவராக தொடர்வார்.
இந்திய ஜூனியர் அணியின் தேர்வுக்குழு தலைவராக, முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார் தேர்வு செய்யப்படுவார் என நம்பப்பட்டது. தற்போது இவர், மேற்கு மண்டலத்தின் சார்பில் சீனியர் தேர்வுக்குழு உறுப்பினராக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
