/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பைனலுக்கு முன்னேறியது நியூசிலாந்து: வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்
/
பைனலுக்கு முன்னேறியது நியூசிலாந்து: வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்
பைனலுக்கு முன்னேறியது நியூசிலாந்து: வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்
பைனலுக்கு முன்னேறியது நியூசிலாந்து: வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்
ADDED : அக் 18, 2024 11:08 PM

சார்ஜா: 'டி-20' உலக கோப்பை பைனலுக்கு நியூசிலாந்து அணி முன்னேறியது. அரையிறுதியில் வெஸ்ட் இண்டீசை 8 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) பெண்களுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 9வது சீசன் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த 2வது அரையிறுதியில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த நியூசிலாந்து அணிக்கு சுசி பேட்ஸ் (26), ஜார்ஜியா (33) கைகொடுத்தது. நியூசிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன் எடுத்தது. இசபெல்லா (20) அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் டீன்டிரா டாட்டின் 4 விக்கெட் சாய்த்தார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹேலி (15), கியானா (12), ஷெமைன் (3), ஸ்டெபானி (13), ஆலியா (4) சோபிக்கவில்லை. டீன்டிரா டாட்டின் 22 பந்தில் 33 ரன் விளாசினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டன. சுசி பேட்ஸ் வீசிய இந்த ஓவரில் 6 ரன் மட்டும் கிடைத்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 120 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் ஈடன் கார்சன் 3 விக்கெட் சாய்த்தார். நியூசிலாந்து அணி 3வது முறையாக (2009, 2010, 2024) பைனலுக்குள் நுழைந்தது.
பைனல் மோதல்: நாளை, துபாயில் நடக்கும் பைனலில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.