/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
நியூசிலாந்து அசத்தல் வெற்றி: டேரில் மிட்செல் சதம்
/
நியூசிலாந்து அசத்தல் வெற்றி: டேரில் மிட்செல் சதம்
ADDED : நவ 16, 2025 10:56 PM

கிறைஸ்ட்சர்ச்: முதல் ஒருநாள் போட்டியில் டேரில் மிட்செல் சதம் விளாச, நியூசிலாந்து அணி 7 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவிந்திரா (4), வில் யங் (0) ஏமாற்றினர். கான்வே (49), பிரேஸ்வெல் (35) ஓரளவு கைகொடுத்தனர். டாம் லதாம் (18), கேப்டன் சான்ட்னர் (11) நிலைக்கவில்லை. டேரில் மிட்செல், 118 பந்தில் 119 ரன் (2x6, 12x4) குவித்தார். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 269/7 ரன் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜான் கேம்பல் (4) ஏமாற்றினார். அலிக் அதானஸ் (29), கீசி கார்டி (32), கேப்டன் ஷாய் ஹோப் (37) ஆறுதல் தந்தனர். ஷெர்பேன் ரூதர்போர்டு (55) அரைசதம் கடந்தார். ராஸ்டன் சேஸ் (16) சோபிக்கவில்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன் தேவைப்பட்டன. ஜேக்கப் டபி வீசிய 50வது ஓவரில், ஒரு சிக்சர் உட்பட 12 ரன் மட்டும் கிடைத்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 262/6 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஜஸ்டின் கிரீவ்ஸ் (38), ரொமாரியோ ஷெப்பர்டு (26) அவுட்டாகாமல் இருந்தனர்.

