தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ நியூசி.,-ஆப்கன் டெஸ்ட் பாதிப்பு * நொய்டா மைதானத்துக்கு சிக்கல்

நியூசி.,-ஆப்கன் டெஸ்ட் பாதிப்பு * நொய்டா மைதானத்துக்கு சிக்கல்

நியூசி.,-ஆப்கன் டெஸ்ட் பாதிப்பு * நொய்டா மைதானத்துக்கு சிக்கல்


ADDED : செப் 10, 2024 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2024 11:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மோதும் போட்டி தொடர்ந்து இரண்டு நாளாக பாதிக்கப்பட்டதால், நொய்டா மைதானத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளை, இந்தியாவில் நடத்த, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) உதவி செய்கிறது. இதன் ஒருபகுதியாக ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி, கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஷகீத் விஜய் பாதிக் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இப்போட்டி செப். 9ல் துவங்க இருந்தது. மழை காரணமாக மைதானம் ஈரமானதால் முதல் நாள் போட்டி கைவிடப்பட்டது. நேற்று மழை இல்லாத போதும், ஆடுகளம், மைதானத்தை தயார் செய்ய போதிய வசதிகள், பணியாளர் இல்லாததால், 2வது நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது.

உ.பி.,யில் இருந்து 'சூப்பர் சாப்பர்', டில்லியில் இருந்து தார்ப்பாய் வசதிகள் செய்யப்பட்ட போதும், தொடர்ந்து இரு நாளாக 'டாஸ்' கூட போடப்படவில்லை.

இதனால் மைதானம் குறித்து 'மேட்ச் ரெப்ரி' ஸ்ரீநாத் அறிக்கைக்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் காத்திருக்கிறது. ஒருவேளை மைதானம் திருப்தி இல்லை என மேட்ச் ரெப்ரி தெரிவித்தால், இங்கு சர்வதேச போட்டி நடக்க 12 மாதம் தடை விதிக்கப்படலாம்.

யார் தவறு

நொய்டா மைதானத்தில் மோசமான சூழல் காரணமாக 2019க்குப் பின், இங்கு உள்ளூர் போட்டி கூட நடத்தப்படுவது இல்லை. டெஸ்ட் போட்டிக்காக பெங்களூரு சின்னச்சாமி மைதானம், கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தை தர பி.சி.சி.ஐ., முன்வந்தது. ஆனால் குறைவான செலவு காரணமாக ஆப்கானிஸ்தான் நிர்வாகம் தான், நொய்டாவை தேர்வு செய்துள்ளது. இம்முடிவு, பி.சி.சி.ஐ.,க்கு சிக்கலை கொண்டு வந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us