தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஒலிம்பிக் கிரிக்கெட்... இந்தியா சாதிக்கும் * ராகுல் டிராவிட் நம்பிக்கை

ஒலிம்பிக் கிரிக்கெட்... இந்தியா சாதிக்கும் * ராகுல் டிராவிட் நம்பிக்கை

ஒலிம்பிக் கிரிக்கெட்... இந்தியா சாதிக்கும் * ராகுல் டிராவிட் நம்பிக்கை


ADDED : ஜூலை 29, 2024 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2024 11:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரிஸ்: ''ஒலிம்பிக் கிரிக்கெட்டில் இந்திய ஆண், பெண்கள் அணிகள் தங்கப்பதக்கம் வென்றால் நன்றாக இருக்கும்,'' என டிராவிட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடக்க உள்ள 34 வது ஒலிம்பிக்கில் (2028), முதன் முறையாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், பாரிசில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் இந்திய அணி முன்னாள் வீரர், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

அவர் கூறியது: வீரர்கள் ஓய்வு அறையில் ('டிரசிங் ரூம்') 2026ல் நடக்கவுள்ள 'டி-20' உலக கோப்பை, 2027ல் நடக்கும் ஒருநாள் உலக கோப்பை குறித்து பேசுகின்றனர். இத்துடன் 2028, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட கிரிக்கெட் குறித்தும் பேசத் துவங்கியுள்ளனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இதில் பங்கேற்று, ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவது, உலகின் பல முன்னணி நட்சத்திரங்களை சந்திப்பதுடன், இதில் பங்கேற்று கிரிக்கெட் பதக்கம் வெல்ல வேண்டும் என விரும்புகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் ஒலிம்பிக் கிரிக்கெட்டில் இந்திய ஆண், பெண்கள் அணிகள் பங்கேற்று, தங்கப்பதக்கம் வென்றால், அது சிறப்பான தொடராக அமையும். இது எனது கனவாக உள்ளது. துரதிருஷ்டவசமாக இதில் என்னால் பங்கேற்க முடியாது என்றாலும், முடிந்தவரை தொடரை சிறப்பாக நடத்த தேவையான முயற்சி எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us