/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஷமிக்கு 'ஆப்பரேஷன்' * ஐ.பி.எல்., தொடரில் விலகல்
/
ஷமிக்கு 'ஆப்பரேஷன்' * ஐ.பி.எல்., தொடரில் விலகல்
ADDED : பிப் 22, 2024 10:46 PM

புதுடில்லி: காயம் காரணமாக ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார் முகமது ஷமி.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 33. சமீபத்தில் அர்ஜுனா விருது வென்ற இவர், 64 டெஸ்ட் (229 விக்.,), 101 ஒருநாள் (195), 23 'டி-20'ல் (24) மொத்தம் 448 விக்கெட் சாய்த்துள்ளார். 2023ல் சொந்தமண்ணில் நடந்த உலக கோப்பை தொடரில், இடது கணுக்கால் காயத்துடன் களமிறங்கிய இவர், அதிக விக்கெட் சாய்த்து (24) 'நம்பர்-1' பவுலர் ஆனார்.
தற்போது ஷமிக்கு ஆப்பரேஷன் செய்யப்பட உள்ளது. இதனால் வரும் ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார். அடுத்த ஆறு மாதம் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பதால், உலக கோப்பை 'டி-20' தொடரில் களமிறங்க மாட்டார்.
வரும் அக்., -நவ., மாதம் சொந்தமண்ணில் இந்திய அணி, வங்கதேசம், நியூசிலாந்துக்கு எதிராக மோதும் டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க முடியாது. 2024 இறுதியில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறலாம்.
இதுகுறித்து வெளியான செய்தியில்,' கடந்த ஜனவரியில் ஷமிக்கு ஊசி மருந்து செலுத்தி சிகிச்சை தரப்பட்டது. மூன்று வாரத்துக்குப் பின் லேசாக ஓடினார். காயம் முழுமையாக குணமடையவில்லை. வேறு வழியில்லாத நிலையில், இவருக்கு ஆப்பரேஷன் செய்யப்பட உள்ளது. இதற்காக விரைவில் லண்டன் செல்ல உள்ளார்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமதம் சரியா
உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் ஷமிக்கு ஆப்பரேஷன் செய்திருந்தால், ஐ.பி.எல்., அல்லது 'டி-20' உலக தொடரில் பங்கேற்றிருக்கலாம். ஆனால் 2 மாத ஓய்வுக்குப் பின், ஊசி செலுத்தினர். தற்போது ஆப்பரேஷன் செய்ய உள்ளனர். தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்த தவறான முடிவு காரணமாக இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.