/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பாகிஸ்தான் அணி அசத்தல் வெற்றி: தென் ஆப்ரிக்கா ஏமாற்றம்
/
பாகிஸ்தான் அணி அசத்தல் வெற்றி: தென் ஆப்ரிக்கா ஏமாற்றம்
பாகிஸ்தான் அணி அசத்தல் வெற்றி: தென் ஆப்ரிக்கா ஏமாற்றம்
பாகிஸ்தான் அணி அசத்தல் வெற்றி: தென் ஆப்ரிக்கா ஏமாற்றம்
UPDATED : டிச 18, 2024 09:52 PM
ADDED : டிச 17, 2024 11:29 PM

பார்ல்: முதல் ஒருநாள் போட்டியில் சைம் அயூப், சல்மான் கைகொடுக்க பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்கா ஏமாற்றியது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பார்ல் நகரில் நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு டோனி டி ஜோர்ஜி (33), ரியான் ரிக்கெல்டன் (36) நல்ல துவக்கம் கொடுத்தனர். கேப்டன் மார்க்ரம் (35) ஓரளவு கைகொடுத்தார். அபாரமாக ஆடிய ஹெய்ன்ரிச் கிளாசன் 86 ரன் விளாசினார். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 239 ரன் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபிக் (0), கேப்டன் முகமது ரிஸ்வான் (1) ஏமாற்றினர். பாபர் ஆசம் (23) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய சைம் அயூப் (109) சதம் விளாசினார். மறுமுனையில் அசத்திய சல்மான் ஆகா அரைசதம் கடந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டது.
மார்கோ யான்சென் பந்துவீசினார். மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சல்மான் (82*) வெற்றியை உறுதி செய்தார். பாகிஸ்தான் அணி 49.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 242 ரன் எடுத்து வெற்றி பெற்றது.