/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பாகிஸ்தான் அணி பவுலர்கள் ஏமாற்றம்: முன்னிலை பெற்றது தென் ஆப்ரிக்கா
/
பாகிஸ்தான் அணி பவுலர்கள் ஏமாற்றம்: முன்னிலை பெற்றது தென் ஆப்ரிக்கா
பாகிஸ்தான் அணி பவுலர்கள் ஏமாற்றம்: முன்னிலை பெற்றது தென் ஆப்ரிக்கா
பாகிஸ்தான் அணி பவுலர்கள் ஏமாற்றம்: முன்னிலை பெற்றது தென் ஆப்ரிக்கா
ADDED : டிச 27, 2024 10:30 PM

செஞ்சுரியன்: பாகிஸ்தான் பவுலர்கள் ஏமாற்ற, தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 301 ரன் எடுத்து முன்னிலை பெற்றது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் செஞ்சுரியனில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 211 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 82/3 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம் (89) அரைசதம் கடந்து நம்பிக்கை தந்தார். கேப்டன் பவுமா (31), டேவிட் பெடிங்காம் (30) ஓரளவு கைகொடுத்தனர். வெர்ரின்னே (2), யான்சென் (2) ஏமாற்றினர்.
தனிநபராக அசத்திய கார்பின் போஷ், அரைசதம் விளாசினார். ரபாடா (13), பாட்டர்சன் (12) நிலைக்கவில்லை.
தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 301 ரன் எடுத்து 90 ரன் முன்னிலை பெற்றது. கார்பின் (81) அவுட்டாகாமல் இருந்தார். பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷஜாத், நசீம் ஷா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் (28), கேப்டன் ஷான் மசூது (28) சோபிக்கவில்லை. கம்ரான் குலாம் (4) ஏமாற்றினார். பாகிஸ்தான் அணி 88/3 ரன் எடுத்திருந்த போது போதி வெளிச்சமின்மை காரணமாக 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பாபர் ஆசம் (16), சவுத் ஷகீல் (8) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் யான்சென் 2 விக்கெட் கைப்பற்றினார்.