/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பாகிஸ்தான் பிடி தளர்ந்தது: மீண்டது வங்கதேசம்
/
பாகிஸ்தான் பிடி தளர்ந்தது: மீண்டது வங்கதேசம்
ADDED : செப் 01, 2024 11:47 PM

ராவல்பிண்டி: லிட்டன் தாஸ் சதம் விளாச, வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 262 ரன் எடுத்தது.
பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் ராவல்பிண்டியில் நடக்கிறது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 274 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 10/0 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் குர்ரம் ஷாஜத் 'வேகத்தில்' ஷாத்மன் (10), ஜாகிர் ஹசன் (1), கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (4) வெளியேறினர்.
பின் இணைந்த லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ் ஜோடி நம்பிக்கை தந்தது. லிட்டன் தாஸ், டெஸ்ட் அரங்கில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். மெஹிதி ஹசன் அரைசதம் கடந்தார். ஏழாவது விக்கெட்டுக்கு 165 ரன் சேர்த்த போது சல்மான் பந்தில் லிட்டன் தாஸ் (138) அவுட்டானார். குர்ரம் ஷாஜத் பந்தில் மெஹிதி ஹசன் (78), டாஸ்கின் அகமது (1) அவுட்டாகினர். வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 262 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷாஜத் 6 விக்கெட் சாய்த்தார்.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபீக் (3), குர்ரம் ஷாஜத் (0) ஏமாற்றினர். ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 9 ரன் எடுத்திருந்தது.