தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு; ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு; ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்
ADDED : அக் 08, 2025 09:50 AM

சென்னை: சென்னையில் இன்று (அக் 08) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,300க்கு விற்பனை ஆகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கையால், பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், சர்வதேச முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்கின்றனர். சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால், நம் நாட்டிலும் அதன் விலை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 06), ஆபரண தங்கம் கிராம், 11,125 ரூபாய்க்கும், சவரன், 89,000 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (அக் 07), தங்கம் விலை கிராமுக்கு, 75 ரூபாய் உயர்ந்து, 11,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 600 ரூபாய் அதிகரித்து, 89,600 ரூபாய்க்கு விற்கப் பட்டது.
இந்நிலையில் இன்று (அக் 08) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.90,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,300க்கு விற்பனை ஆகிறது.
இதுவே தங்கம் விற்பனையில் உச்ச விலையாகும். ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.