/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வங்கம்-பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்: தாமதமாக பந்துவீசியதால்
/
வங்கம்-பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்: தாமதமாக பந்துவீசியதால்
வங்கம்-பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்: தாமதமாக பந்துவீசியதால்
வங்கம்-பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம்: தாமதமாக பந்துவீசியதால்
ADDED : ஆக 26, 2024 10:46 PM

ராவல்பிண்டி: முதல் டெஸ்டில் தாமதமாக பந்துவீசிய வங்கதேசம், பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடந்தது. இதில் வங்கதேச அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரு அணி பவுலர்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி தவறினர். இதனையடுத்து ஐ.சி.சி., சார்பில் இரு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆறு ஓவர் தாமதமாக பந்துவீசிய பாகிஸ்தான் அணிக்கு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளி குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி, 16 புள்ளிகளுடன் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பாகிஸ்தான் வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
மூன்று ஓவர் தாமதமாக பந்துவீசிய வங்கதேச அணிக்கு, 3 புள்ளி குறைக்கப்பட்டது. வங்கதேச அணி 21 புள்ளிகளுடன், 7வது இடத்தில் உள்ளது. வங்கதேச வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் நோக்கி வேகமாக பந்தை எறிந்த குற்றத்திற்காக வங்கதேச 'ஆல்-ரவுண்டர்' சாகிப் அல் ஹசனுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இருவருக்கும் ஒரு தகுதி இழப்பு புள்ளி பெற்றனர்.

