/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: டில்லி அரசு வழங்கியது
/
பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: டில்லி அரசு வழங்கியது
பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: டில்லி அரசு வழங்கியது
பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: டில்லி அரசு வழங்கியது
ADDED : டிச 08, 2025 09:58 PM

புதுடில்லி: டில்லி அரசு சார்பில் இந்திய வீராங்கனை பிரதிகா ராவலுக்கு ரூ. 1.5 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடந்தது. இதன் பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி, முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றது. பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு, இந்திய வீராங்கனைகளை நேரில் பாராட்டினர். பி.சி.சி.ஐ., மட்டுமின்றி வீராங்கனைகள் சார்ந்துள்ள மாநில அரசுகளும் பரிசு வழங்கி வருகின்றன.
இந்நிலையில் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற பிரதிகா ராவலுக்கு 25, டில்லி மாநில அரசு சார்பில் ரூ. 1.5 கோடி பரிசாக வழங்கப்பட்டது. டில்லி மாநில முதல்வர் ரேகா குப்தா, பிரதிகா ராவலுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
இத்தொடரில் துவக்க வீராங்கனையாக அசத்திய பிரதிகா, 7 போட்டியில், ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 308 ரன் குவித்தார். அதிக ரன் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் 4வது இடத்தை கைப்பற்றினார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் காயமடைந்த இவர், அரையிறுதி, பைனலில் விளையாடவில்லை.

