/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பிரதமர் மோடி வாழ்த்து: 'உலகை' வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு...
/
பிரதமர் மோடி வாழ்த்து: 'உலகை' வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு...
பிரதமர் மோடி வாழ்த்து: 'உலகை' வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு...
பிரதமர் மோடி வாழ்த்து: 'உலகை' வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு...
ADDED : நவ 24, 2025 11:27 PM

புதுடில்லி: பார்வையற்றோர் உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கையில், பார்வையற்றோர் பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை முதல் சீசன் நடந்தது. இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த பைனலில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கோப்பை வென்ற இந்திய அணியினர் நேற்று பெங்களூரு வந்தனர். இவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'பார்வையற்றோர் 'டி-20' உலக கோப்பை முதல் சீசனில் தோல்வியை சந்திக்காமல் சாதித்த இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனை. இந்த வெற்றியை கடின உழைப்பு, குழுப்பணி, மனஉறுதிக்கு எடுத்துக்காட்டாக கருதுகிறேன். இதில் இடம் பெற்ற ஒவ்வொரு வீராங்கனையும் சாம்பியன் தான். அணியின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள். இச்சாதனை, இளம் தலைமுறையினருக்கு ஊக்கமாக அமையும்,' என, தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் கிரேட்டர் நொய்டாவில் நடந்த உலக குத்துச்சண்டை கோப்பையில் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரங்களையும் பிரதமர் மோடி பாராட்டினார்.

