/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வில்லியம்சன் தேர்வு: நியூசிலாந்து அணி அறிவிப்பு
/
வில்லியம்சன் தேர்வு: நியூசிலாந்து அணி அறிவிப்பு
ADDED : நவ 24, 2025 11:23 PM

வெலிங்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணிக்கு வில்லியம்சன் தேர்வானார்.
நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் டிச. 2ல் கிறைஸ்ட்சர்ச்சில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் வெலிங்டன் (டிச. 10-14), மவுன்ட் மவுங்கானுயில் (டிச. 18-22) நடக்கவுள்ளன. இத்தொடருக்கான 14 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.
இதில், முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் 35, இடம் பெற்றுள்ளார். சமீபத்தில் சர்வதேச 'டி-20' போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த வில்லியம்சன், கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான ஹாமில்டன் டெஸ்டில் (2024, டிச. 14-17) விளையாடினார். கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு ஒருநாள் போட்டியில் விளையாடிய இவருக்கு, இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. காயத்தில் இருந்து மீண்ட இவர், டெஸ்ட் தொடருக்கு தேர்வானார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்த டேரில் மிட்செல், டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்து அணி: டாம் லதாம் (கேப்டன்), கான்வே, கேன் வில்லியம்சன், வில் யங், ரச்சின் ரவிந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், நாதன் ஸ்மித், மாட் ஹென்றி, ஜேக்கப் டபி, பிளேர் டிக்னர், ஜாக் பவுல்க்ஸ்.

