தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சுப்மன் கில் 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்

சுப்மன் கில் 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்

சுப்மன் கில் 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்


ADDED : பிப் 19, 2025 10:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 10:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் முதலிடத்துக்கு முன்னேறினார்.

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது.

பேட்டர் தரவரிசையில் இந்திய துவக்க வீரர் சுப்மன் கில், 796 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 259 ரன் குவித்திருந்தார். இவர், 2வது முறையாக முதலிடம் பிடித்தார். இதற்கு முன், 2023ல் 'நம்பர்-1' இடம் பிடித்திருந்தார். பாகிஸ்தானின் பாபர் ஆசம் (773 புள்ளி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இங்கிலாந்துக்கு எதிராக 2 அரைசதம் உட்பட 181 ரன் எடுத்த இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் (679 புள்ளி) 10வது இடத்தில் இருந்து 9வது இடத்தை கைப்பற்றினார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா (761), விராத் கோலி (727) முறையே 3, 6வது இடத்தில் நீடிக்கின்றனர்.

குல்தீப் 'நம்பர்-4': பவுலர் தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், 652 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறினார். இலங்கையின் மகேஷ் தீக் ஷனா (680), ஆப்கானிஸ்தானின் ரஷித் கானை (669) பின்தள்ளி 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார்.

'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (217) 10வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us