UPDATED : அக் 25, 2024 10:54 PM
ADDED : அக் 24, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐதராபாத்: இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 11 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 23-18 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் பாட்னா வீரர்கள் சிறப்பாக செயல்பட, 31-33 என நெருங்கினர்.
போட்டி முடிய 5 நிமிடம் இருந்த போது தமிழ் தலைவாஸ் ஆல் அவுட்டாக, 36-37 என பின்தங்கியது.
முடிவில் தமிழ் தலைவாஸ் அணி, 40-42 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது. தமிழ் தலைவாஸ் அணியின் நரேந்தர் 15, பாட்னா அணியின் தேவாங்க் 25 புள்ளி எடுத்தனர்.