தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இளம் வீரர்கள் சாதிப்பது எப்படி * ரகசியம் சொல்கிறார் சஷாங்க் சிங்

இளம் வீரர்கள் சாதிப்பது எப்படி * ரகசியம் சொல்கிறார் சஷாங்க் சிங்

இளம் வீரர்கள் சாதிப்பது எப்படி * ரகசியம் சொல்கிறார் சஷாங்க் சிங்


ADDED : ஏப் 10, 2024 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2024 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முல்லன்பூர்: ''உள்ளூர் போட்டிகளில் கடின உழைப்பு, தன்னம்பிக்கை என இரண்டும் தான், ஐ.பி.எல்., தொடரில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட காரணம்,'' என சஷாங்க் சிங் தெரிவித்தார்.

ஐ.பி.எல்., வீரர்கள் ஏலத்தில் பஞ்சாப் அணி நிர்வாகத்தின் சார்பில் 19 வயது சஷாங்க் சிங்கிற்குப் பதில் தவறுதலாக வாங்கப்பட்டவர், 32 வயது சஷாங்க் சிங். இருப்பினும், பேட்டிங்கில் மிரட்டி வருகிறார்.

குஜராத்துக்கு எதிராக 29 பந்தில் 61 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினார். ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் 25 பந்தில் 46 ரன் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். இத்தொடரில் ரகுவன்ஷி (கோல்கட்டா), அஷுதோஷ் (பஞ்சாப்), நிதிஷ் குமார் (ஐதராபாத்) என அறிமுகமற்ற வீரர்கள் சிறப்பாக செயல்படுவது குறித்து சஷாங்க் சிங் கூறியது:

இளம் வீரர்கள் உள்ளூர் போட்டிகளைப் போல, கடின உழைப்பை வெளிப்படுத்தி, தன்னம்பிக்கையுடன் விளையாடுவது தான் வெற்றிக்கு காரணம். இதனால் தான், ஐ.பி.எல்., போட்டிகளில் ரன்மழை பொழிகின்றனர். ஐதராபாத் வீரர் நிதிஷ் குமார் பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாக விளையாடினார். உள்ளூர் போட்டிகளிலும் இவர் நன்கு செயல்படுவார்.

இவரும், அஷுதோஷும் முஸ்தாக் அலி, விஜய் ஹசாரே தொடரில் கலக்கினர். ரகுவன்ஷி ரஞ்சி தொடரில் அசத்தினார். இவர்கள் உங்களுக்கு அறிமுகமற்ற வீரர்களாக இருக்கலாம். ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் எல்லோருக்கும் தெரியும். அங்கு விளையாடியது போல ஐ.பி.எல்., தொடரில் சிறப்பாக செயல்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us