தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பஞ்சாப் அணி அபார வெற்றி: மும்பை மீண்டும் தோல்வி

பஞ்சாப் அணி அபார வெற்றி: மும்பை மீண்டும் தோல்வி

பஞ்சாப் அணி அபார வெற்றி: மும்பை மீண்டும் தோல்வி


ADDED : ஏப் 16, 2026 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 11:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷ்ரேயசின் அபார ஆட்டம் கைகொடுக்க, பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி மீண்டும் தோல்வியடைந்தது.

வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

குயின்டன் சதம்: மும்பை அணிக்கு அர்ஷ்தீப் சிங் தொல்லை தந்தார். இவர் வீசிய 3வது ஓவரின் முதலிரண்டு பந்தில் ரிக்கிள்டன் (2), சூர்யகுமார் யாதவ் (0), அவுட்டாகினர். வைஷாக் வீசிய 9வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய குயின்டன், சகால் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். தொடர்ந்து அசத்திய குயின்டன், சேவியர் பார்ட்லெட் வீசிய 11வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த நமன் திர், 29 பந்தில் அரைசதம் விளாசினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 122 ரன் சேர்த்த போது சஷாங்க் சிங் பந்தில் நமன் திர் (50) அவுட்டானார்.

சஷாங்க் வீசிய 16வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட குயின்டன், பார்ட்லெட் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 53 பந்தில் சதம் கடந்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (14), ஷெர்பேன் ரூதர்போர்டு (1), திலக் வர்மா (8) சோபிக்கவில்லை.

மும்பை அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 195 ரன் எடுத்தது. குயின்டன் (112 ரன், 60 பந்து, 7X6, 8X4) அவுட்டாகாமல் இருந்தார். பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் 3 விக்கெட் கைப்பற்றினார்.

பிரப்சிம்ரன் அபாரம்: சவாலான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா (15), கூப்பர் கனோலி (17) நிலைக்கவில்லை. பின் இணைந்த பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி நம்பிக்கை தந்தது. தீபக் சகார் வீசிய 8வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய பிரப்சிம்ரன், ஹர்திக் பாண்ட்யா வீசிய 10வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி விரட்டினார். ஷர்துல் தாகூர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய பிரப்சிம்ரன், 24 பந்தில் அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய ஷ்ரேயஸ், ஷர்துல், பும்ரா பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். தொடர்ந்து அசத்திய பிரப்சிம்ரன், ஹர்திக் பாண்ட்யா வீசிய 14வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். பும்ரா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஷ்ரேயஸ், 21 பந்தில் அரைசதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 139 ரன் சேர்த்த போது ஷர்துல் 'வேகத்தில்' ஷ்ரேயஸ் (66) வெளியேறினார். தீபக் சகார் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஸ்டாய்னிஸ் வெற்றியை உறுதி செய்தார்.

பஞ்சாப் அணி 16.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 198 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பிரப்சிம்ரன் (80 ரன், 39 பந்து, 2X6, 11X4), ஸ்டாய்னிஸ் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

அர்ஷ்தீப் '100'

மும்பையின் ரிக்கிள்டனை அவுட்டாக்கிய அர்ஷ்தீப் சிங், கிரிக்கெட் லீக் வரலாற்றில் 100 விக்கெட் சாய்த்த முதல் பஞ்சாப் அணி பவுலரானார். 87 போட்டியில் இம்மைல்கல்லை எட்டிய இவர், இதுவரை 102 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அடுத்த இடத்தில் பியுஷ் சாவ்லா (84 விக்.,) உள்ளார்.

* இத்தொடரில், 100 விக்கெட் வீழ்த்திய 5வது இடதுகை வேகப்பந்துவீச்சாளரானார் அர்ஷ்தீப். ஏற்கனவே பவுல்ட் (144 விக்.,), உனத்கட் (114), நெஹ்ரா (106), ஜாகீர் கான் (102) இந்த இலக்கை எட்டினர்.

ஒன்பதாவது சதம்

ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் 4வது இடத்தை கோலி, ரோசவ், பர்ஹானுடன் பகிர்ந்து கொண்ட குயின்டன். நால்வரும் தலா 9 சதம் அடித்துள்ளனர். முதல் மூன்று இடங்களில் கெய்ல் (22 சதம்), பாபர் (11), வார்னர் (10) உள்ளனர்.

மூன்று சதம்

கிரிக்கெட் லீக் அரங்கில், மூன்று அணிகள் சார்பில் சதம் விளாசிய 3வது வீரரானார் மும்பையின் குயின்டன். ஏற்கனவே டில்லி, லக்னோ அணிகளுக்காக சதம் அடித்திருந்தார். ராகுல் (பஞ்சாப், லக்னோ, டில்லி), சஞ்சு சாம்சன் (டில்லி, ராஜஸ்தான், சென்னை) ஆகியோரும் இப்படி சதமடித்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us