/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரகானே அரைசதம்: அரையிறுதியில் லீசெஸ்டர்ஷைர்
/
ரகானே அரைசதம்: அரையிறுதியில் லீசெஸ்டர்ஷைர்
ADDED : ஆக 17, 2024 10:43 PM

லீசெஸ்டர்: ஒருநாள் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு லீசெஸ்டர்ஷைர் அணி முன்னேறியது. காலிறுதியில் ரகானே அரைசதம் விளாச 3 விக்கெட் வித்தியாசத்தில் ஹாம்ப்ஷயர் அணியை வீழ்த்தியது.
இங்கிலாந்தில், ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லீசெஸ்டரில் நடந்த காலிறுதியில் லீசெஸ்டர்ஷைர், ஹாம்ப்ஷைர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற லீசெஸ்டர்ஷைர் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
ஹாம்ப்ஷைர் அணிக்கு கேப்டன் நிக் குபின்ஸ் (136), லியாம் டாசன் (50) கைகொடுக்க, 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 290 ரன் எடுத்தது. சவாலான இலக்கை விரட்டிய லீசெஸ்டர்ஷைர் அணிக்கு அஜின்கியா ரகானே (70), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் (74), லியாம் டிரேவாஸ்கிஸ் (60*) நம்பிக்கை அளித்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட, லீசெஸ்டர்ஷைர் அணி 49.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 291 ரன் எடுத்து 'திரில்' வெற்றி பெற்றது.

