தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்: சாம் கர்ரான் அரைசதம்

ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்: சாம் கர்ரான் அரைசதம்

ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்: சாம் கர்ரான் அரைசதம்


UPDATED : மே 15, 2024 11:21 PM

ADDED : மே 15, 2024 10:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 15, 2024 11:21 PM ADDED : மே 15, 2024 10:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கவுகாத்தி: கேப்டன் சாம் கர்ரான் அரைசதம் விளாச, பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது.

அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் மோதின. ராஜஸ்தான் அணியில் பட்லருக்கு பதிலாக இங்கிலாந்தின் டாம்-கோலர் காட்மோர் அறிமுகமானார். 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

ஜெய்ஸ்வால் ஏமாற்றம்

ராஜஸ்தான் அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால், காட்மோர் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. சாம் கர்ரான் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஜெய்ஸ்வால் (4), 4வது பந்தில் அவுட்டானார். கேப்டன் சஞ்சு சாம்சன் (18), நாதன் எல்லிஸ் பந்தில் அவுட்டானார். ராகுல் சகார் 'சுழலில்' காட்மோர் (18) சிக்கினார். ராஜஸ்தான் அணி 42 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அஷ்வின் ஆறுதல்

பின் இணைந்த ரியான் பராக், அஷ்வின் ஜோடி நிதானமாக விளையாடியது. ஹர்ஷல் படேல் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார் ரியான் பராக். மறுமுனையில் அசத்திய அஷ்வின், ராகுல் சகார் வீசிய 12வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடிக்க 17 ரன் கிடைத்தன. நான்காவது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்த போது அர்ஷ்தீப் சிங் 'வேகத்தில்' அஷ்வின் (28) வெளியேறினார்.

அடுத்து வந்த துருவ் ஜுரெல் 'டக்-அவுட்' ஆனார். சாம் கர்ரான் பந்தில் ஒரு பவுண்டரி அடித்த ராவ்மன் பாவெல் (4), ராகுல் சகாரிடம் சரணடைந்தார். 'இம்பாக்ட்' வீரர் டோனோவன் பெரேரா (7) சோபிக்கவில்லை. அடுத்து வந்த பவுல்ட், எல்லிஸ் வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். பொறுப்பாக ஆடிய ரியான் பராக் (48), ஹர்ஷல் படேல் 'வேகத்தில்' ஆட்டமிழந்தார். பவுல்ட் (12) 'ரன்-அவுட்' ஆனார்.

ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்தது. அவேஷ் கான் (3) அவுட்டாகாமல் இருந்தார். பஞ்சாப் சார்பில் சாம் கர்ரான், ஹர்ஷல் படேல், ராகுல் சகார் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

கர்ரான் கலக்கல்

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் (6) ஏமாற்றினார். பவுல்ட் வீசிய 3வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டிய ரோசோவ், சந்தீப் சர்மா வீசிய 4வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். அவேஷ் கான் வீசிய 5வது ஓவரில் ரோசோவ் (22), சஷாங்க் சிங் (0) அவுட்டாகினர். சகால் 'சுழலில்' பேர்ஸ்டோவ் (14) சிக்கினார்.

பின் இணைந்த கேப்டன் சாம் கர்ரான், ஜிதேஷ் சர்மா ஜோடி நம்பிக்கை அளித்தது. அஷ்வின் வீசிய 15வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த போது சகால் பந்தில் ஜிதேஷ் (22) அவுட்டானார். அபாரமாக ஆடிய கர்ரான், 38 பந்தில் அரைசதம் எட்டினார். தொடர்ந்து அசத்திய இவர், சந்தீப் சர்மா, அவேஷ் கான் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். அவேஷ் கான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய அஷுதோஷ் சர்மா வெற்றியை உறுதி செய்தார்.

பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 145 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கர்ரான் (63), அஷுதோஷ் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us