தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ராஜஸ்தான் வீரருக்கு அபராதம்

ராஜஸ்தான் வீரருக்கு அபராதம்

ராஜஸ்தான் வீரருக்கு அபராதம்


ADDED : ஏப் 23, 2026 10:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 10:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லக்னோ: லக்னோவில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி (159/6), 40 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணியை (119/10) வீழ்த்தியது. இப்போட்டியில் ராஜஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் பர்கர் 30, லக்னோ அணி கேப்டன் ரிஷாப் பன்ட்டை அவுட்டாக்கிய போது ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். போட்டி விதிமுறைப்படி எதிரணி வீரரை தகாத வார்த்தையால் திட்டுவது, சைகை செய்வது குற்றமாகும். எனவே பர்கருக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டது.

வருகிறார் ஸ்டார்க்

சிட்னி: ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் 36, டில்லி அணியில் இடம் பெற்றுள்ளார். முழங்கை, தோள்பட்டை காயத்தால் பாதிக்கப்பட்ட இவர், கிரிக்கெட் லீக் தொடரின் துவக்கத்தில் ஒரு சில போட்டிகளில் இருந்து விலகினார். தற்போது காயத்தில் இருந்து மீண்ட இவர், தனது உடற்தகுதியை நிரூபித்தார். இதனையடுத்து இத்தொடரில் விளையாட, கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) இவருக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் வரும் மே 1ல் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஸ்டார்க் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் இவர், டில்லி அணிக்காக 11 போட்டியில், 14 விக்கெட் சாய்த்திருந்தார்.

டில்லி அணியில் ரேஹன்

புதுடில்லி: கிரிக்கெட் லீக் தொடருக்கான டில்லி அணியில் இங்கிலாந்தின் பென் டக்கெட் 31, இடம் பெற்றிருந்தார். சர்வதேச போட்டியில் கவனம் செலுத்துவதற்காகவும், உடல், மனதளவிலான பணிச்சுமைமை கையாள்வதற்காகவும், இத்தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக, இங்கிலாந்து 'ஆல்-ரவுண்டர்' ரேஹன் அகமது, ரூ. 75 லட்சத்திற்கு டில்லி அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வலது கை சுழற்பந்துவீச்சாளரான ரேஹன், இதுவரை 5 டெஸ்ட் (22 விக்.,), 9 ஒருநாள் (12), 13 சர்வதேச 'டி-20' (15) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தவிர இவர், 97 'டி-20' போட்டிகளில் (85 விக்.,) விளையாடி உள்ளார். இத்தொடரில் முதன்முறையாக பங்கேற்க உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us