தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ரஞ்சி: மும்பை அணி முன்னிலை

ரஞ்சி: மும்பை அணி முன்னிலை

ரஞ்சி: மும்பை அணி முன்னிலை


ADDED : பிப் 07, 2026 10:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 10:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: ரஞ்சி கோப்பை காலிறுதியில் மும்பை அணி முன்னிலை பெற்றது.

மும்பையில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 91வது சீசனுக்கான காலிறுதியில் மும்பை, கர்நாடகா அணிகள் விளையாடுகின்றன. மும்பை அணி முதல் இன்னிங்சில் 120 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் 110/2 ரன் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் கருண் நாயர் (4) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய மயங்க் அகர்வால் (92) கைகொடுத்தார். ரவிச்சந்திரன் ஸ்மரன் (0), ஷ்ரேயஸ் கோபால் (0), பிரசித் கிருஷ்ணா (0) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற, கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் 173 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. மும்பை அணி சார்பில் மோகித் அவஸ்தி, துஷார் தேஷ்பாண்டே தலா 4 விக்கெட் சாய்த்தனர்.

பின் 2வது இன்னிங்சை துவக்கிய மும்பை அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (36), அகில் (33) நல்ல துவக்கம் தந்தனர். ஆகாஷ் ஆனந்த் அரைசதம் கடந்தார். இவருக்கு முஷீர் கான் கைகொடுக்க மும்பை அணி முன்னிலை பெற்றது. ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2வது இன்னிங்சில் 189/2 ரன் எடுத்து, 136 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஆகாஷ் (53), முஷீர் (49) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆந்திரா அபாரம்

* மேற்கு வங்கத்தின் கல்யாணியில் நடக்கும் காலிறுதியின் முதல் இன்னிங்சில் ஆந்திர அணி 295 ரன் எடுத்தது. ஆட்டநேர முடிவில் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 199/5 ரன் எடுத்து, 96 ரன் பின்தங்கி இருந்தது.

* ஜாம்ஷெட்பூரில் நடக்கும் காலிறுதியின் முதல் இன்னிங்சில் ஜார்க்கண்ட் அணி 235 ரன் எடுத்தது. ஆட்டநேர முடிவில் உத்தரகாண்ட் அணி 282/5 ரன் எடுத்து, 47 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

* இந்துாரில் நடக்கும் காலிறுதியின் முதல் இன்னிங்சில் ஜம்மு காஷ்மீர் 194, மத்திய பிரதேசம் 152 ரன் எடுத்தன. ஆட்டநேர முடிவில் ஜம்மு காஷ்மீர் அணி 2வது இன்னிங்சில் 84/5 ரன் எடுத்து, 126 ரன் முன்னிலையில் இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us