/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரஞ்சி: தமிழக பவுலர்கள் தடுமாற்றம்
/
ரஞ்சி: தமிழக பவுலர்கள் தடுமாற்றம்
ADDED : அக் 27, 2025 10:33 PM

பெங்களூரு: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக பவுலர்கள் தடுமாறினர்.
பெங்களூருவில் உள்ள பி.சி.சி.ஐ., சிறப்பு மைய மைதானத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், நாகலாந்து அணிகள் விளையாடுகின்றன. தமிழக அணி முதல் இன்னிங்சில் 512/3 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. இரண்டாம் நாள் முடிவில், நாகலாந்து அணி முதல் இன்னிங்சில் 150/4 ரன் எடுத்திருந்தது. நிஸ்கல் (80), யுகந்தர் (58) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் நாகலாந்து அணிக்கு தேகா நிஸ்கல், யுகந்தர் சிங் ஜோடி கைகொடுத்தது. யுகந்தர் அரைசதம் கடந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 129 ரன் சேர்த்த போது யுகந்தர் (67) அவுட்டானார். பின் இணைந்த நிஸ்கல், இம்லிவதி லெம்துர் ஜோடி ரன் மழை பொழிந்தது. இருவரும் சதம் விளாசினர். இவர்களை பிரிக்க முடியாமல் தமிழக பவுலர்கள் தடுமாறினர்.
ஆட்டநேர முடிவில் நாகலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 365 ரன் எடுத்திருந்தது. நிஸ்கல் (161), லெம்துர் (115) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழகம் சார்பில் குர்ஜப்னீத் சிங் 4, சந்திரசேகர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இப்போட்டி 'டிரா'வில் முடிய அதிக வாய்ப்பு உள்ளது. மீதமுள்ள விக்கெட்டுகளை விரைவில் கைப்பற்றினால், தமிழக அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்று 3 புள்ளி பெறலாம்.

