தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ரஞ்சி கோப்பை: தமிழகம் அபாரம்: 184 ரன்னுக்கு சுருண்டது ரயில்வே

ரஞ்சி கோப்பை: தமிழகம் அபாரம்: 184 ரன்னுக்கு சுருண்டது ரயில்வே

ரஞ்சி கோப்பை: தமிழகம் அபாரம்: 184 ரன்னுக்கு சுருண்டது ரயில்வே


UPDATED : அக் 27, 2026 12:00 AM

ADDED : அக் 26, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 12:00 AM ADDED : அக் 26, 2026 09:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக பவுலர்கள் அசத்த, ரயில்வே அணி முதல் இன்னிங்சில் 184 ரன் மட்டும் எடுத்தது.

ரஞ்சி கோப்பை முதல்தர கிரிக்கெட் 92வது சீசன் நடக்கிறது. நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கிய ‘டி’ பிரிவு 3வது சுற்று போட்டியில் தமிழகம், ரயில்வே அணிகள் விளையாடுகின்றன. ‘டாஸ்’ வென்ற தமிழக கேப்டன் சாய் கிஷோர் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

முதல் இன்னிங்சை துவக்கிய ரயில்வே அணிக்கு தமிழக பவுலர்கள் தொல்லை தந்தனர். சோனு யாதவ் ‘வேகத்தில்’ சஹாப் யுவராஜ் சிங் (4), ஈஷான் கோயல் (0), முகமது சைப் (0) வெளியேறினர். சாய் கிஷோர் ‘சுழலில்’ விவேக் சிங் (14), ராஜ் சவுத்ரி (7) சிக்கினர். கேப்டன் பார்கவ் மெராய் (17), ரவி சிங் (21) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ஜுபைர் அலி (75) அரைசதம் கடந்தார். ரயில்வே அணி முதல் இன்னிங்சில் 184 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ஹிமான்ஷு சங்வான் (7) அவுட்டாகாமல் இருந்தார். தமிழகம் சார்பில் சோனு யாதவ், சாய் கிஷோர் தலா 3, ஜெகநாதன் ஹேம்சுதேஷன் 2 விக்கெட் கைப்பற்றினர்.

பின் முதல் இன்னிங்சை துவக்கிய தமிழக அணிக்கு விமல் குமார் (0) ஏமாற்றினார். நாராயண் ஜெகதீசன் (30) ஓரளவு கைகொடுத்தார். பிரதோஷ் ரஞ்சன் பால் (19) நிலைக்கவில்லை. ஆட்டநேர முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 71/3 ரன் எடுத்து, 113 ரன் பின்தங்கி இருந்தது. பாபா இந்திரஜித் (13), ஆன்ட்ரி சித்தார்த் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us