தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தமிழக அணி தடுமாற்றம்: ரஞ்சி கோப்பை தொடரில்

தமிழக அணி தடுமாற்றம்: ரஞ்சி கோப்பை தொடரில்

தமிழக அணி தடுமாற்றம்: ரஞ்சி கோப்பை தொடரில்


UPDATED : அக் 12, 2026 09:12 PM

ADDED : அக் 12, 2026 08:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 09:12 PM ADDED : அக் 12, 2026 08:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெய்ப்பூர்: ரஞ்சி கோப்பை லீக் போட்டி யில் தமிழக அணி தடுமாறி வருகிறது.

ரஞ்சி கோப்பை முதல்தர கிரிக்கெட் 92வது சீசன் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள், 5 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடக்கும் ‘டி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் ராஜஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 286/4 ரன் எடுத்திருந்தது.

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. கரண் 113 ரன்னில் அவுட்டானார். அரைசதம் அடித்த மஹிபால் 66 ரன் எடுத்தார். மற்றவர்கள் ஏமாற்ற ராஜஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 363 ரன்னில் ஆல் அவுட்டானது. தமிழகம் சார்பில் தீபேஷ் 3, சரவண குமார் 3, வாஷிங்டன் 2 விக்கெட் சாய்த்தனர். நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தன.

இரண்டு அரைசதம்



தமிழக அணிக்கு சாய் சுதர்சன் (3), ஜெகதீசன் ஜோடி துவக்கம் தந்தது. ஜெகதீசன் (55), பிரதோஷ் ரஞ்சன் பால் (58) ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்தனர். பாபா இந்திரஜித் (26) நிலைக்கவில்லை. தமிழக அணி முதல் இன்னிங்சில் 167/4 ரன் எடுத்திருந்தது. கைவசம் 6 விக்கெட் மட்டும் மீதமுள்ள நிலையில் தமிழக அணி 196 ரன் பின்தங்கி உள்ளது.

புதுச்சேரி திணறல்



நாக்பூரில் நடக்கும் ‘ஏ’ பிரிவு போட்டியில் முதல் இன்னிங்சில் விதர்பா அணி 428 ரன் குவித்தது. புதுச்சேரி அணி முதல் இன்னிங்சில் 107/1 ரன் எடுத்து, 321 ரன் பின்தங்கி இருந்தது.

மும்பை ஆதிக்கம்



மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கும் ‘டி’ பிரிவு போட்டி, முதல் இன்னிங்சில் மும்பை அணி 429 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சண்டிகர் அணி, முதல் இன்னிங்சில் 78 ரன்னில் சுருண்டு, ‘பாலோ ஆன்’ பெற்றது. பின் இரண்டாவது இன்னிங்சில் சண்டிகர் அணி 0/1 ரன் எடுத்து, 351 ரன் பின்தங்கி இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us