UPDATED : அக் 12, 2026 09:13 PM
ADDED : அக் 12, 2026 08:56 PM

அபுதாபி: ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள் மோதும் ஒரு டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 346, ஆப்கானிஸ்தான் 240 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 223/6 ரன் எடுத்து, 329 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. கேப்டன் நஜ்முல் ஷாண்டோ 82 ரன் எடுத்தார். மறுபக்கம் லிட்டன் தாஸ் (102) சதம் அடித்து அவுட்டானார். வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 372/7 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.
அடுத்து 479 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது ஆப்கானிஸ்தான். அப்துல் மாலிக் (2), ஷாகிதுல்லா (19) கைவிட்டனர். கேப்டன் ரஹ்மத் ஷா (51) அரைசதம் அடித்தார். நான்காவது நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி, இரண்டாவது இன்னிங்சில் 132/3 ரன் எடுத்து, 347 ரன் பின்தங்கி இருந்தது.
