தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ரஞ்சி கோப்பை: பைனலில் விதர்பா

ரஞ்சி கோப்பை: பைனலில் விதர்பா

ரஞ்சி கோப்பை: பைனலில் விதர்பா


ADDED : மார் 06, 2024 10:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 10:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாக்பூர்: ரஞ்சி கோப்பை பைனலுக்கு விதர்பா அணி முன்னேறியது. அரையிறுதியில் 62 ரன் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது.

இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் ரஞ்சி கோப்பை 89வது சீசன் நடக்கிறது. நாக்பூரில் நடந்த அரையிறுதியில் மத்திய பிரதேசம் (ம.பி.,), விதர்பா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் விதர்பா 170, ம.பி., 252 ரன் எடுத்தன. விதர்பா அணி 2வது இன்னிங்சில் 402 ரன் எடுத்தது. பின் 321 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ம.பி., அணி 4ம் நாள் முடிவில் 228/6 ரன் எடுத்திருந்தது.

ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஆதித்யா தாக்கரே 'வேகத்தில்' குமார் கார்த்திகேயா, அனுபவ் அகர்வால் 'டக்-அவுட்' ஆகினர். யாஷ் தாகூர் பந்தில் சரண்ஷ் ஜெயின் (25), குல்வந்த் கெஜ்ரோலியா (11) அவுட்டாகினர். உ.பி., அணி 2வது இன்னிங்சில் 258 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது.

விதர்பா அணி சார்பில் யாஷ் தாகூர், அக்சய் வகாரே தலா 3, ஆதித்யா தாக்கரே, ஆதித்யா சர்வதே தலா 2 விக்கெட் சாய்த்தனர். சதம் விளாசிய விதர்பா அணியின் யாஷ் ரத்தோடு ஆட்ட நாயகன் விருது வென்றார்.

மும்பை, வான்கடே மைதானத்தில் மார்ச் 10-14ல் நடக்கும் பைனலில் மும்பை, விதர்பா அணிகள் விளையாடுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us