/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மீண்டது வெஸ்ட் இண்டீஸ்: கவேம் ஹாட்ஜ் சதம்
/
மீண்டது வெஸ்ட் இண்டீஸ்: கவேம் ஹாட்ஜ் சதம்
ADDED : ஜூலை 19, 2024 10:32 PM

நாட்டிங்காம்: கவேம் ஹாட்ஜ் சதம் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவிலிருந்து மீண்டது.
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் நாட்டிங்காமில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 416 ரன் எடுத்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரேக் பிராத்வைட்(48), மிகைல் லுாயிஸ்(21) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. பஷிர் 'சுழலில்' கிர்க் மெக்கென்சி (11) சிக்கினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 84 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
பின் இணைந்த அலிக் அதானஸ், கவேம் ஹாட்ஜ் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. அதானஸ், டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். நான்காவது விக்கெட்டுக்கு 175 ரன் சேர்த்த போது அதானஸ் (82) அவுட்டானார். அபாரமாக ஆடிய ஹாட்ஜ், சதம் விளாசினார்.
தேநீர் இடைவேளைக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 305 ரன் எடுத்திருந்தது. ஹாட்ஜ் (120), ஹோல்டர் (10) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்தின் பஷிர் 2 விக்கெட் வீழ்த்தினார்.