/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரோகித் சர்மா 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில் முதன்முறை
/
ரோகித் சர்மா 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில் முதன்முறை
ரோகித் சர்மா 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில் முதன்முறை
ரோகித் சர்மா 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில் முதன்முறை
ADDED : அக் 29, 2025 10:12 PM

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா முதன்முறையாக 'நம்பர்-1' இடம் பிடித்தார்.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, 781 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து முதன்முறையாக 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.
சமீபத்தில் சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் (121*) விளாசினார் ரோகித். இதன்மூலம் ஐ.சி.சி., தரவரிசை பட்டியலில் அதிக வயதில் (38 ஆண்டு, 182 நாள்) 'நம்பர்-1' இடம் பிடித்த வீரரானார் ரோகித். இதற்கு முன் இந்தியாவின் சச்சின் (38 ஆண்டு, 73 நாள்), 2011ல் வெளியான டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தார்.
முதலிடத்தில் இருந்து இந்திய கேப்டன் சுப்மன் கில் (745 புள்ளி) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பவுலர் தரவரிசையில் 6 இடம் முன்னேறிய இந்திய சுழற்பந்துவீச்சாளர் அக்சர் படேல் (536 புள்ளி) 31வது இடத்துக்கு முன்னேறினார். இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் (7வது இடம், 634 புள்ளி) மட்டும் 'டாப்-10' பட்டியலில் இடம் பெற்றுள்ளார். முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (710) தொடர்கிறார்.
'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் அக்சர் படேல் (229 புள்ளி) 12வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா உமர்சாய் (334 புள்ளி) நீடிக்கிறார்.

