தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ரோகித், சுப்மன் சதம் * இந்திய அணி ஆதிக்கம்

ரோகித், சுப்மன் சதம் * இந்திய அணி ஆதிக்கம்

ரோகித், சுப்மன் சதம் * இந்திய அணி ஆதிக்கம்


ADDED : மார் 08, 2024 04:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 04:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மசாலா: ஐந்தாவது டெஸ்டில் ரோகித் சர்மா, சுப்மன் கில் சதம் விளாச, இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டி முடிவில் இந்திய அணி 3-1 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது, கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில் நடக்கிறது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 218 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 135/1 ரன் எடுத்து, 83 ரன் பின்தங்கி இருந்தது. ரோகித் (52), சுப்மன் கில் (26) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டு சதம்

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது. இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹார்ட்லே பந்தில் பவுண்டரி அடித்த ரோகித், டெஸ்ட் அரங்கில் 12 வது சதம் எட்டினார். சுப்மன், பஷிர் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, தன் பங்கிற்கு சதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 171 ரன் சேர்த்தனர்.

உணவு இடைவேளைக்குப் பின், இத்தொடரில் முதன் முறையாக பந்து வீசினார் இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ். முதல் பந்தில் ரோகித் (103) போல்டானார். அடுத்த ஓவரில் ஆண்டர்சன், சுப்மனை (110) போல்டாக்கினார்.

சர்பராஸ் கான் (56), இத்தொடரில் தனது மூன்றாவது அரைசதம் கடந்து அவுட்டானார். அறிமுக டெஸ்டில் தேவ்தத் படிக்கல், அரைசதம் கடந்தார். இவர் 65 ரன்னில் பஷிர் பந்தில் போல்டானார். பின் துருவ் (15), ஜடேஜா (15) என வரிசையாக வெளியேறினர். 100வது டெஸ்டில் களமிறங்கிய அஷ்வின், 'டக்' அவுட்டானார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 434 ரன் எடுத்து, 216 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us