sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

அதிக கோல்... ரொனால்டோ சாதனை * சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில்

/

அதிக கோல்... ரொனால்டோ சாதனை * சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில்

அதிக கோல்... ரொனால்டோ சாதனை * சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில்

அதிக கோல்... ரொனால்டோ சாதனை * சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில்

1


ADDED : மே 28, 2024 11:03 PM

Google News

ADDED : மே 28, 2024 11:03 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரியாத்: சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என சாதனை படைத்தார் ரொனால்டோ.சவுதி அரேபியாவில் புரோ லீக் கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடந்தது. மொத்தம் 18 அணிகள், தலா இரு முறை மோதின. நேற்று கடைசி, 34வது சுற்று மோதல் நடந்தன. ரியாத்தில் நடந்த போட்டியில் கால்பந்து உலகின் முன்னணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 39, (போர்ச்சுகல்) இடம் பெற்ற அல் நாசர் அணி, அல் இத்திஹாடு அணியை சந்தித்தது.

போட்டியின் முதல் பாதி 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (45+3வது) ரொனால்டோ முதல் கோல் அடித்தார். இரண்டாவது பாதியில் 69 வது நிமிடம் புரஜோவிச் கொடுத்த பந்தை பெற்ற ரொனால்டோ கோலாக மாற்றினார். இதையடுத்து சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என சாதனை படைத்தார். இவர் 31 போட்டியில் 35 கோல் அடித்தார். முன்னதாக 2018-19 தொடரில் அல் இத்திஹாடு அணி வீரர் அப்தர்ரஜாக் ஹம்தல்லா, 34 கோல் அடித்ததே அதிகமாக இருந்தது.

தொடர்ந்து அசத்திய அல் நாசர் அணிக்கு காரீப் (79 வது), அல் நேமெர் (90+5வது) தலா ஒரு கோல் அடித்து உதவினர். அல் இத்திஹாடு அணி சார்பில் ஷம்ரானி (88வது), பேபினோ (90+2வது) தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் அல் நாசர் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அல் ஹிலால் சாம்பியன்

சவுதி புரோ லீக் தொடரில் அல் ஹிலால் அணி, 34 போட்டியில் 31ல் வெற்றி (3 'டிரா') பெற்று 96 புள்ளியுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனது. ரொனால்டோவின் அல் நாசர் அணி (34ல் 26 வெற்றி, 4 'டிரா', 4 தோல்வி) 82 புள்ளியுடன் இரண்டாவது இடம் பெற்றது. தவிர, அல் நாசர் அணி முதன் முறையாக இத்தொடரில் 100 கோல் அடித்தது.

முதல் வீரர்

உலகின் நான்கு நாடுகளில் நடந்த தொடரில் அதிக கோல் அடித்து சாதனை படைத்த முதல் வீரர் ஆனார் ரொனால்டோ.

* பிரிமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 31 கோல் (2007-08) அடித்தார்.

* லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணிக்காக மூன்று முறை (2011-12ல் 40 கோல், 2013-14ல் 31, 2014-15ல் 48) அதிக கோல் அடித்த வீரர் ஆனார்.

* சீரி ஏ தொடரில் யுவண்டஸ் அணிக்காக 20 கோல் (2020-21) அடித்தார்.

* தற்போது சவுதி புரோ லீக் தொடரில் 35 கோல் அடித்துள்ளார்.






      Dinamalar
      Follow us