தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/'ரன் மெஷின்' கோலி

'ரன் மெஷின்' கோலி

'ரன் மெஷின்' கோலி


ADDED : மார் 27, 2026 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 11:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் விராத் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர், 267 போட்டியில், 8661 ரன் குவித்துள்ளார். அடுத்த மூன்று இடங்களில் ரோகித் சர்மா (7046 ரன், 272 போட்டி), ஷிகர் தவான் (6769 ரன், 222 போட்டி), வார்னர் (6565 ரன், 184 போட்டி) உள்ளனர்.

கலக்கல் 'பீல்டர்'

அதிக 'கேட்ச்' செய்த 'பீல்டர்' பட்டியலில் விராத் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர், 267 போட்டியில், 117 'கேட்ச்' செய்துள்ளார். அடுத்த நான்கு இடங்களில் ரெய்னா (109 'கேட்ச்'), ஜடேஜா (109), போலார்டு (103), ரோகித் (102) உள்ளனர்.

'விக்கெட் வேட்டையன்'

அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் யுவேந்திர சகால் முதலிடத்தில் உள்ளார். இவர், 174 போட்டியில், 221 விக்கெட் கைப்பற்றினார். அடுத்த ஐந்து இடங்களில் புவனேஷ்வர் குமார் (198 விக்கெட்), சுனில் நரைன் (192), பியுஸ் சாவ்லா (192), அஷ்வின் (187), பும்ரா (183) உள்ளனர்.

'ஹாட்ரிக்' சாதனை

இதுவரை 23 முறை 'ஹாட்ரிக்' சாதனை பதிவாகின. இதில் அமித் மிஸ்ரா (2008, 2011, 2013) அதிகபட்சமாக மூன்று முறை இச்சாதனை படைத்தார். யுவராஜ் சிங் (2009ல் 2), யுவேந்திர சகால் (2022, 2025) தலா 2, பாலாஜி (2008), நிடினி (2008), ரோகித் சர்மா (2009), பிரவீண் குமார் (2010), அஜித் சண்டிலா (2012), சுனில் நரைன் (2013), பிரவீண் தாம்பே (2014), ஷேன் வாட்சன் (2014), அக்சர் படேல் (2016), சாமுவேல் பத்ரீ (2017), ஆன்ட்ரூ டை (2017), ஜெயதேவ் உனத்கட் (2017), ஸ்ரேயாஸ் கோபால் (2019), சாம் கரான் (2019), ஹர்ஷல் படேல் (2021), ரஷித் கான் (2023) தலா ஒரு முறை இச்சாதனை நிகழ்த்தினர்.

* 2015, 2018, 2020, 2024ல் ஒரு 'ஹாட்ரிக்' விக்கெட் கூட பதிவாகவில்லை.

6 விக்கெட்

ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பவுலர்கள் பட்டியலில் மும்பையின் அல்சாரி ஜோசப் (6/12, எதிர்: ஐதராபாத், 2019) முதலிடம். அடுத்த இரு இடங்களில் ராஜஸ்தானின் சோகைல் தன்வீர் (6/14, எதிர்: சென்னை, 2008), புனேயின் ஆடம் ஜாம்பா (6/19, எதிர்: ஐதராபாத், 2016) உள்ளனர்.

'டக்-அவுட்' சோகம்

அதிக முறை 'டக்-அவுட்' ஆன வீரர்கள் வரிசையில் மேக்ஸ்வெல் முதலிடம். இவர், 19 முறை ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டானார். அடுத்த 6 இடங்களில் தினேஷ் கார்த்திக் (18 'டக்-அவுட்'), ரோகித் (18), நரைன் (17), ரஷித் கான் (16), சாவ்லா (16), மன்தீப் சிங் (15) உள்ளனர்.

அதிக 'மெய்டன்'

துல்லியமாக பந்துவீசி ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் அதிக 'மெய்டன்' ஓவர் வீசிய பவுலர்கள் பட்டியலில் புவனேஷ்வர் குமார், பிரவீண் குமார் முதலிடத்தில் உள்ளனர். இருவரும் தலா 14 'மெய்டன்' வீசினர். அடுத்த இரு இடங்களில் டிரன்ட் பவுல்ட் (11 'மெய்டன்'), இர்பான் பதான் (10) உள்ளனர்.

கிடைக்குமா '300'

பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் (2024, பெங்களூரு) ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 287 ரன் குவித்தது. இது, பிரிமியர் லீக் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் பதிவான அதிகபட்ச ஸ்கோர். கடந்த 18 சீசனில், 12 முறை மட்டும் ஒரு இன்னிங்சில் 250 அல்லது அதற்கு மேல் ரன் எடுக்கப்பட்டது. இதில் 2024ல் மட்டும் 8 முறை இப்படி ரன் குவிக்கப்பட்டது. ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் 3 முறை ஆண்களுக்கான போட்டியிலும், 5 முறை பெண்களுக்கான போட்டியிலும் தலா 300 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டது. இந்திய அணி 3 ரன்னில் (297/6, எதிர்: வங்கம், 2024, ஐதராபாத்) 300 ரன்னை தவறவிட்டது.

எனவே இம்முறை ஒரு இன்னிங்சில் 300 ரன் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 'பவர் பிளே' ஓவரில் 100 முதல் 150 ரன் குவிக்க வேண்டும். 'இம்பேக்ட்' விதியால், கூடுதலாக ஒரு பேட்டரை சேர்த்துக் கொள்ளலாம் என்பதால் 300 ரன்னை எட்ட வாய்ப்பு உள்ளது.

அதிகபட்ச ஸ்கோர்

ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த அணிகளுக்கான பட்டியலில் ஐதராபாத் முதலிடம். கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 287/3 ரன் குவித்தது.

குறைந்தபட்ச ஸ்கோர்

ஒரு இன்னிங்சில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணிகளுக்கான வரிசையில் பெங்களூரு முதலிடம். கடந்த 2017ல் கொல்கட்டாவுக்கு எதிராக 49 ரன்னுக்கு சுருண்டது.

இமாலய வெற்றி

அதிக ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற அணிகளுக்கான வரிசையில் மும்பை முதலிடம். கடந்த 2017ல் டில்லிக்கு எதிராக 146 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த இரு இடங்களில் பெங்களூரு (144 ரன் வித்தியாசம், எதிர்: குஜராத், 2016), கொல்கட்டா (140 ரன் வித்தியாசம், எதிர்: பெங்களூரு, 2008) உள்ளன.

* ஐ.பி.எல்., அரங்கில் 15 முறை, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பதிவானது. பெங்களூரு 4, ஐதராபாத் 3, சென்னை, மும்பை தலா 2, டெக்கான், ராஜஸ்தான், கோல்கட்டா, பஞ்சாப் தலா ஒரு முறை இப்படி வெற்றி பெற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us