ADDED : ஏப் 30, 2026 10:22 PM

புதிய சண்டிகர்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் (ஏப்.28) போது ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக், 'டிரஸ்சிங் ரூமில்' 'இ-சிகரெட்' புகைத்தது அம்பலமானது. இது, சட்டப்படி தவறு என்பதால், இவருக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு இருந்தது. ஆனால், ஒரு தகுதி இழப்பு புள்ளி, போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவீத அபராதத்துடன் தப்பினார். ஏற்கனவே வீரர்களுக்கான 'டக்-அவுட்' பகுதியில் அலைபேசி பயன்படுத்திய ராஜஸ்தான் மேனேஜர் ரோமி பிந்தருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து விதிமுறை மீறும் ராஜஸ்தான் அணி மீது கடும் நடவடிக்கை எடுக்க பி.சி.சி.ஐ., திட்டமிட்டுள்ளது.
பும்ராவுக்கு என்னாச்சு
மும்பை: 'யார்க்கர்' புகழ் பும்ரா (மும்பை) இம்முறை தடுமாறுகிறார். ஐதராபாத்திற்கு எதிரான கடந்த போட்டியில் 4 ஓவரில் 54 ரன்னை வாரி வழங்கினார். ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் போலார்டு கூறுகையில்,''பும்ராவும் மனிதர் தான். தவறுகள் செய்யலாம். விரைவில் மீண்டு வருவார். அனைவரும் பும்ரா...பும்ரா என கோஷம் எழுப்ப போகிறோம். மும்பைக்காக மட்டும் அல்ல இந்திய அணிக்காகவும் முத்திரை பதிப்பார். இவரை சிறிது காலம் விமர்சிக்காமல் இருப்போம்,''என்றார்.
