/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
எஸ்.ஏ.20: இந்தியாவில் வரவேற்பு
/
எஸ்.ஏ.20: இந்தியாவில் வரவேற்பு
ADDED : நவ 13, 2025 10:49 PM
மும்பை: தென் ஆப்ரிக்காவில் உள்ளூர் 'எஸ்.ஏ.20' தொடர் நடத்தப்படுகிறது. ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் உட்பட 6 அணிகள் பங்கேற்கின்றன.
நான்காவது சீசன் வரும் டிச. 26ல் கேப்டவுனில் துவங்குகிறது. இந்தியாவில் 'எஸ்.ஏ.20' தொடருக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.
இந்தியாவில் ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மும்பையில் 'இந்தியா எஸ்.ஏ.20 தினம்' கொண்டாடப்பட்டது. தொடரின் கமிஷனரும், முன்னாள் தென் ஆப்ரிக்க கேப்டனுமான கிரேம் ஸ்மித், சூப்பர் கிங்ஸ் கேப்டன் டுபிளசி, கேப்டவுன் கேப்டன் ஆம்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது.
ஸ்மித் கூறுகையில்,'' எஸ்.ஏ.20 தொடரின் மையமாக இந்தியா உள்ளது. பிரிமியர் தொடர் அணி உரிமையாளர்கள் வழங்கிய ஆதரவு, ஜியோ ஸ்டார் நிறுவன ஒளிபரப்பு, தொடரின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன,'' என்றார்.

