/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சாய் கிஷோர் கேப்டன்: தமிழக அணி அறிவிப்பு
/
சாய் கிஷோர் கேப்டன்: தமிழக அணி அறிவிப்பு
ADDED : டிச 12, 2024 10:44 PM

சென்னை: விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான தமிழக அணியின் கேப்டனாக சாய் கிஷோர் நியமனம்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் விஜய் ஹசாரே டிராபி 32வது சீசன் (டிச. 21 - 2025, ஜன. 18) நடக்கவுள்ளது. தமிழகம், 'நடப்பு சாம்பியன்' ஹரியானா உள்ளிட்ட 38 அணிகள் பங்கேற்கின்றன.
இத்தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சாய் கிஷோர், துணை கேப்டனாக நாராயண் ஜெகதீசன் அறிவிக்கப்பட்டனர். இதுவரை 5 முறை விஜய் ஹசாரே கோப்பை வென்ற தமிழக அணி, கடந்த முறை அரையிறுதியில் ஹரியானாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது.
தமிழக அணி: சாய் கிஷோர் (கேப்டன்), நாராயண் ஜெகதீசன் (துணை கேப்டன்), பாபா இந்திரஜித், ஆன்ட்ரி சித்தார்த், பூபதி குமார், துஷார் ரஹேஜா, ஷாருக்கான், முகமது அலி, சந்தீப் வாரியர், தீபேஷ், அச்யுத், பிரணவ் ராகவேந்திரா, அஜித் ராம், வருண் சக்கரவர்த்தி, விஜய் சங்கர், பிரதோஷ் ரஞ்சன் பால்.