தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சகால் சுழல் ஜாலம்: அறிமுக போட்டியில் 5 விக்கெட்

சகால் சுழல் ஜாலம்: அறிமுக போட்டியில் 5 விக்கெட்

சகால் சுழல் ஜாலம்: அறிமுக போட்டியில் 5 விக்கெட்


ADDED : ஆக 14, 2024 10:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2024 10:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேன்டர்பரி: 'ஒன் டே' கோப்பை அறிமுக போட்டியில் அசத்திய இந்தியாவின் சகால் 5 விக்கெட் சாய்த்தார்.

இந்திய சுழற்பந்துவீச்சாளர் யுவேந்திர சகால் 34. இதுவரை 72 ஒருநாள் (121 விக்கெட்), 80 சர்வதேச 'டி-20' (96) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் இவர், இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிசன்-2, 'ஒன் டே' கோப்பை தொடர்களில் நார்த்தாம்டன்ஷைர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கேன்டர்பரில் நடந்த 'ஒன் டே' கோப்பை தொடருக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் நார்த்தாம்டன்ஷைர். கென்ட் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த கென்ட் அணி 35.1 ஓவரில் 82 ரன்னுக்கு சுருண்டது. சுழலில் அசத்திய சகால், 10 ஓவரில் 14 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். இதில் 5 'மெய்டன்' ஓவர் அடங்கும்.

சுலப இலக்கை விரட்டிய நார்த்தாம்டன்ஷைர் அணி 14 ஓவரில் 86/1 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us