தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சேலம், திண்டுக்கல் அணிகள் ஏமாற்றம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்

சேலம், திண்டுக்கல் அணிகள் ஏமாற்றம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்

சேலம், திண்டுக்கல் அணிகள் ஏமாற்றம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்


UPDATED : ஜூலை 14, 2024 11:31 PM

ADDED : ஜூலை 14, 2024 11:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2024 11:31 PM ADDED : ஜூலை 14, 2024 11:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் சேலம், திண்டுக்கல் அணிகள் தோல்வியடைந்து ஏமாற்றின.

டி.என்.பி.எல்., எட்டாவது சீசன் நடக்கிறது. கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சேலம், திருச்சி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேலம் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

திருச்சி அணிக்கு அர்ஜுன் மூர்த்தி (11), வாசீம் அகமது (19), சியாம் சுந்தர் (19) சுமாரான துவக்கம் கொடுத்தனர். ஜாபர் ஜமால் (32) கைகொடுத்தார். அதிரடியாக விளையாடிய சஞ்சய் யாதவ் 26 பந்தில் அரைசதம் கடந்தார். ஹரிஸ் குமார் வீசிய 18வது ஓவரில் மூன்று சிக்சர் பறக்கவிட்ட சஞ்சய் (68), பொய்யாமொழி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் ராஜ்குமார் (18*), சரவண குமார் (17*) ஓரளவு ரன் சேர்த்தனர்.

திருச்சி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது. சேலம் அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட் கைப்பற்றினார்.

கடின இலக்கை விரட்டிய சேலம் அணிக்கு கவின் (13), அபிஷேக் (10), கேப்டன் ஷிஜித் சந்திரன் (6), விஷால் வைத்யா (10) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய விவேக், 10 பந்தில் 33 ரன் (4 சிக்சர், 2 பவுண்டரி) விளாசினார். முகமது அட்னான் கான் (40) ஓரளவு கைகொடுத்தார். ஹரிஷ் குமார் (15) 'ரன்-அவுட்' ஆனார். சன்னி சந்து (29) ஆறுதல் தந்தார். சேலம் அணி 18.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது.

திருச்சி அணி சார்பில் சரவணகுமார் 3 விக்கெட் சாய்த்தார்.

திண்டுக்கல் தோல்வி

மற்றொரு லீக் போட்டியில் சேப்பாக்கம், திண்டுக்கல் அணிகள் மோதின. மழையால் தலா 7 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. 'டாஸ்' வென்ற சேப்பாக்கம் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. திண்டுக்கல் அணிக்கு கேப்டன் அஷ்வின் (45*) ஆறுதல் தர, 7 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 64 ரன் எடுத்தது. சேப்பாக்கம் சார்பில் அபிஷேக் தன்வர், கணேசன் பெரியசாமி தலா 2 விக்கெட் சாய்த்தனர். எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சேப்பாக்கம் அணிக்கு நாராயண் ஜெகதீசன் (32*), கேப்டன் பாபா அபராஜித் (31*) கைகொடுக்க, 4.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 65 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us