தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இங்கிலாந்துக்கு இரண்டாவது வெற்றி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது

இங்கிலாந்துக்கு இரண்டாவது வெற்றி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது

இங்கிலாந்துக்கு இரண்டாவது வெற்றி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது


ADDED : பிப் 14, 2026 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 10:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோல்கட்டா: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.

கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடருக்கான 'சி' பிரிவு லீக் போட்டியில் ஸ்காட்லாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

ஸ்காட்லாந்து அணிக்கு மைக்கேல் ஜோன்ஸ் (33), டாம் புரூஸ் (24) ஓரளவு கைகொடுத்தனர். அடில் ரஷித் 'சுழலில்' பெரிங்டன் (49) சிக்கினார். மைக்கேல் லீஸ்க் (1), மாத்யூ கிராஸ் (8) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.

ஸ்காட்லாந்து அணி 19.4 ஓவரில் 152 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. டேவிட்சன் (20) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித் 3, ஆர்ச்சர், டாசன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

பான்டன் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (2), பட்லர் (3) சோபிக்கவில்லை. பின் இணைந்த ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன் ஜோடி கைகொடுத்தது. டேவிட்சன் பந்தில் பெத்தேல் (32) அவுட்டானார். கேப்டன் ஹாரி புரூக் (4) ஏமாற்றினார்.

மார்க் வாட் வீசிய 9வது ஓவரில் 3 சிக்சர் பறக்கவிட்ட பான்டன், பிராட் கர்ரி பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். சாம் கர்ரான் (28) நம்பிக்கை தந்தார். பிராட் வீல் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த வில் ஜாக்ஸ் வெற்றியை உறுதி செய்தார்.

இங்கிலாந்து அணி 18.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பான்டன் (63 ரன், 3x6, 4x4), ஜாக்ஸ் (16) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை பான்டன் வென்றார். இரண்டாவது வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து, 'சூப்பர்-8' சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us