/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட்: வருகிறார் ஷமி
/
'பார்டர்-கவாஸ்கர்' டெஸ்ட்: வருகிறார் ஷமி
UPDATED : டிச 07, 2024 10:52 PM
ADDED : டிச 07, 2024 03:23 PM

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடக்கும் 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் இந்தியாவின் ஷமி பங்கேற்க உள்ளார்.
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 34, கணுக்கால் காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்டார். இதிலிருந்து மீண்ட இவர், ரஞ்சி கோப்பையில் பெங்கால் சார்பில் (எதிர்: மத்திய பிரதேசம்) 43 ஓவர் வீசினார். தற்போது சையது முஷ்தாக் அலி டிராபியில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இத்தொடருக்கு பின், என்.சி.ஏ., சார்பில் ஷமியின் உடற்தகுதி பரிசோதிக்கப்படும். இதில் தேர்ச்சி பெறும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவில் நடக்கும் 'பார்டர்-கவாஸ்கர்' தொடரின் கடைசி 2 டெஸ்டில் (மெல்போர்னில் டிச. 26-30, சிட்னியில் 2025, ஜன. 3-7) விளையாடுவார். ஏற்கனவே இவரது கிரிக்கெட் உபகரணங்கள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டன.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், ''போதுமான உள்ளூர் போட்டிகளில் ஷமி விளையாடிவிட்டார். இவரை உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பினால் நல்லது. பும்ரா மீதான சுமை குறையும்,'' என்றார்.