/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பவுலிங் பயிற்சியில் ஷமி: இங்கிலாந்து தொடருக்கு 'ரெடி'
/
பவுலிங் பயிற்சியில் ஷமி: இங்கிலாந்து தொடருக்கு 'ரெடி'
பவுலிங் பயிற்சியில் ஷமி: இங்கிலாந்து தொடருக்கு 'ரெடி'
பவுலிங் பயிற்சியில் ஷமி: இங்கிலாந்து தொடருக்கு 'ரெடி'
ADDED : ஜன 19, 2025 11:31 PM

கோல்கட்டா: இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடருக்கு தயாராக இந்தியாவின் ஷமி 'பவுலிங்' பயிற்சி மேற்கொண்டார்.
இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி, 5 'டி-20', 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் 'டி-20' போட்டி ஜன. 22ல் கோல்கட்டாவில் நடக்கவுள்ளது. இப்போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய வீரர்கள், கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதில் காயத்தில் இருந்து மீண்டு, 14 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பிய சீனியர் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியும் 'பவுலிங்' பயிற்சி மேற்கொண்டார். 'பவுலிங்' பயிற்சியாளர் மார்னே மார்கல் முன்னிலையில் பந்துவீசிய ஷமி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது இடது முழங்காலில் கனமான பட்டையை கட்டிக்கொண்டார். துவக்கத்தில் குறைவான துாரத்தில் ஓடிய இவர், ஒரு மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டார். தவிர இவர், இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல், திலக் வர்மா ஆகியோருக்கு பந்துவீசினார்.
பயிற்சிக்கு பின் ஷமி, 'பவுலிங்' பயிற்சியாளர் மார்னே மார்கலுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

