/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஷ்ரேயஸ், இஷான் கிஷானுக்கு இடம்: பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்த பட்டியலில்
/
ஷ்ரேயஸ், இஷான் கிஷானுக்கு இடம்: பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்த பட்டியலில்
ஷ்ரேயஸ், இஷான் கிஷானுக்கு இடம்: பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்த பட்டியலில்
ஷ்ரேயஸ், இஷான் கிஷானுக்கு இடம்: பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்த பட்டியலில்
ADDED : ஏப் 21, 2025 10:11 PM

புதுடில்லி: பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்த பட்டியலில் ஷ்ரேயஸ், இஷான் கிஷான் மீண்டும் இடம் பெற்றனர்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், 2024-25 சீசனுக்கான வீரர்கள் சம்பள மத்திய ஒப்பந்த பட்டியல் வெளியானது. குறிப்பிட்ட கால இடைவெளியில் 3 டெஸ்ட் அல்லது 8 ஒருநாள் அல்லது 5 சர்வதேச 'டி-20' போட்டியில் விளையாடிய வீரர்கள் இப்பட்டியலில் இடம் பெறுவர். இதில் மொத்தம் 34 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், ஏ+, ஏ, பி, சி, என நான்கு 'கிரேடு'களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிந்திர ஜடேஜா, 'ஏ+ கிரேடில்' தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். இவர்களுக்கு தலா ரூ. 7 கோடி சம்பளமாக வழங்கப்படும்.
பன்ட் 'ஏ' கிரேடு: கார் விபத்தில் சிக்கியதால் போதுமான போட்டிகளில் விளையாடாத விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட், 2023-24 சீசனுக்கான ஒப்பந்த பட்டியலில் 'பி' கிரேடுக்கு தள்ளப்பட்டார். மீண்டும் போட்டிக்கு திரும்பிய இவர், புதிய ஒப்பந்த பட்டியலில் மீண்டும் 'ஏ' கிரேடில் இடம் பிடித்தார். லோகேஷ் ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, முகமது சிராஜ், 'ஏ' கிரேடில் நீடிக்கின்றனர். இவர்களுக்கு சம்பளமாக தலா ரூ. 5 கோடி கிடைக்கும்.
மீண்டும் ஷ்ரேயஸ்: உள்ளூர் போட்டிகளில் விளையாட மறுத்த ஷ்ரேயஸ், கடந்த ஆண்டு வெளியான ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். மீண்டும் உள்ளூர் போட்டியில் களமிறங்கிய இவர், மும்பை அணிக்கு ரஞ்சி, இரானி, சையது முஷ்தாக் அலி டிராபி பெற்றுத்தந்தார். பிரிமியர் லீக் தொடரில் இவரது தலைமையிலான கோல்கட்டா அணி கோப்பை வென்றது. இதனையடுத்து புதிய ஒப்பந்த பட்டியலில் மீண்டும் 'பி' கிரேடில் இடம் பெற்றார்.
இஷானுக்கு இடம்: உள்ளூர் போட்டிகளை புறக்கணித்த விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷான், 2023-24ம் ஆண்டுக்கான ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். மீண்டும் போட்டிக்கு திரும்பிய இவருக்கு, புதிய ஒப்பந்த பட்டியலில் 'சி' கிரேடில் இடம் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஒப்பந்த பட்டியலில் இடம் பிடித்திருந்த ஷர்துல் தாகூர், கே.எஸ். பரத், ஜிதேஷ் சர்மா, அவேஷ் கான் விடுவிக்கப்பட்டனர்.
வீரர்கள் ஒப்பந்த பட்டியல்
'ஏ+ கிரேடு': ரோகித், கோலி, பும்ரா, ஜடேஜா
'ஏ கிரேடு': சிராஜ், ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, ஷமி, பன்ட்
'பி கிரேடு': சூர்யகுமார், குல்தீப், அக்சர் படேல், ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ்
'சி' கிரேடு: ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, இஷான் கிஷான், ரஜத் படிதர், துருவ் ஜுரெல், சர்பராஸ் கான், நிதிஷ் குமார், அபிஷேக் சர்மா, வருண் சக்ரவர்த்தி, ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா.

