/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சுப்மன் கில் பெயர் பரிந்துரை: ஐ.சி.சி., சிறந்த வீரர் விருதுக்கு
/
சுப்மன் கில் பெயர் பரிந்துரை: ஐ.சி.சி., சிறந்த வீரர் விருதுக்கு
சுப்மன் கில் பெயர் பரிந்துரை: ஐ.சி.சி., சிறந்த வீரர் விருதுக்கு
சுப்மன் கில் பெயர் பரிந்துரை: ஐ.சி.சி., சிறந்த வீரர் விருதுக்கு
ADDED : ஆக 06, 2025 10:06 PM

துபாய்: ஐ.சி.சி., விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில் பரிந்துரைக்கப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்படுகிறது. ஜூலை மாத விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியானது.
சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்ரிக்காவின் வியான் முல்டர் பரிந்துரைக்கப்பட்டனர்.
சமீபத்தில் முடிந்த 'ஆண்டர்சன் - சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் அசத்திய சுப்மன் கில் 754 ரன் (4 சதம், சராசரி 75.40, 'ஸ்டிரைக் ரேட்' 65.56) குவித்தார். ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்த இந்திய கேப்டன் பட்டியலில் கவாஸ்கரை (732 ரன்) முந்தினார். இச்சாதனை படைத்த சர்வதேச கேப்டன் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனுக்கு (810 ரன்) பின் 2வது இடத்தில் உள்ளார் கில்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 'ஆல்-ரவுண்டராக' அசத்திய ஸ்டோக்ஸ், 304 ரன் (சராசரி 43.42, 'ஸ்டிரைக் ரேட்' 52.32), 17 விக்கெட் கைப்பற்றினார். ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் தென் ஆப்ரிக்காவின் வியான் முல்டர், 367 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.