/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-2': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
/
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-2': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-2': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ஸ்மிருதி மந்தனா 'நம்பர்-2': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ADDED : ஜன 21, 2025 10:06 PM

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய வீராங்கனை மந்தனா 2வது இடத்துக்கு முன்னேறினார்.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, 738 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார். அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பேட்டிங்கில் அசத்திய மந்தனா, ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 249 ரன் விளாசினார்.
ஒருநாள் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்த இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (562), 19வது இடத்தில் இருந்து 17வது இடத்துக்கு முன்னேறினார். இத்தொடரில் விளையாடாத இந்திய அணியின் 'ரெகுலர்' கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (604) 15வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் லாரா வோல்வார்ட் (773) நீடிக்கிறார்.
பவுலர் தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் தீப்தி சர்மா, 680 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (770 புள்ளி) உள்ளார்.
'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா, 344 புள்ளிகளுடன் 6வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ கார்ட்னர் (469) 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.