/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஸ்மிருதி மந்தனா வாய்ப்பு: ஐ.சி.சி., விருதுக்கு பரிந்துரை
/
ஸ்மிருதி மந்தனா வாய்ப்பு: ஐ.சி.சி., விருதுக்கு பரிந்துரை
ஸ்மிருதி மந்தனா வாய்ப்பு: ஐ.சி.சி., விருதுக்கு பரிந்துரை
ஸ்மிருதி மந்தனா வாய்ப்பு: ஐ.சி.சி., விருதுக்கு பரிந்துரை
ADDED : நவ 06, 2025 09:49 PM

துபாய்: சிறந்த வீராங்கனைக்கான ஐ.சி.சி., விருதுக்கு இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா பரிந்துரைக்கப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும். கடந்த அக்டோபர் மாதத்தின் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டோர் பட்டியல் வெளியானது.
சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்ரிக்க கேப்டன் லாரா வால்வார்ட், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்ட்னர் பரிந்துரை செய்யப்பட்டனர்.
சமீபத்தில் முடிந்த உலக கோப்பையில் ஆஸ்திரேலியா (80), இங்கிலாந்துக்கு (88) எதிராக அரைசதம் விளாசிய ஸ்மிருதி, நியூசிலாந்துக்கு எதிரான முக்கியமான போட்டியில் சதம் கடந்து (109) வெற்றிக்கு கைகொடுத்தார். தொடர்ந்து அசத்திய இவர், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பைனலில், சகவீராங்கனை ஷைபாலி வர்மாவுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்தார்.
தென் ஆப்ரிக்காவின் லாரா வால்வார்ட், சமீபத்திய உலக கோப்பையில் அதிக ரன் (571) குவித்த வீராங்கனையானார். நியூசிலாந்து (115), இங்கிலாந்துக்கு (104*) எதிராக சதம் கடந்த கார்ட்னர் (328), உலக கோப்பையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிக ரன் எடுத்த வீராங்கனையானார்.

