தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/டெஸ்டில் சூர்யவன்ஷி: அஷ்வின் விருப்பம்

டெஸ்டில் சூர்யவன்ஷி: அஷ்வின் விருப்பம்

டெஸ்டில் சூர்யவன்ஷி: அஷ்வின் விருப்பம்


ADDED : மே 10, 2026 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 11:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெய்ப்பூர்: கிரிக்கெட் லீக் 19வது சீசனில் பேட்டிங்கில் அசத்தி வரும் ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15, இதுவரை விளையாடிய 11 போட்டியில், ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 440 ரன் குவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் கூறுகையில், ''இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, உலகின் தலைசிறந்த பவுலர்களுக்கு எதிராக எவ்வித தயக்கமும், அழுத்தமின்றி அதிரடியாக விளையாடுகிறார். ஆட்டம் குறித்த புரிதல், நெருக்கடியான நேரத்தில் அதிரடியாக விளையாடுவது போன்றவை அவரை அபாயகரமான வீரராக மாற்றி உள்ளது. சிக்சர் விளாசுவதன் மூலம் ரசிகர்களை மகிழ்விக்கிறார். இவரது 'பேட்டிங்கை' டெஸ்ட் போட்டியிலும் காண விரும்புகிறேன். இந்தியாவுக்காக மூன்று வித போட்டியிலும் விளையாடக்கூடிய தகுதி, திறமை இவரிடம் உள்ளது,'' என்றார்.

பலமான பேட்டிங் வரிசை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த கிரிக்கெட் லீக் போட்டியில் குஜராத் அணி (229/4), 77 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை (152/10) வீழ்த்தியது. தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்த குஜராத் அணி, 14 புள்ளிகளுடன் 'டாப்-4' வரிசையில் இடம் பிடித்து, 'பிளே-ஆப்' வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டது.

குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆஸ்திரேலியாவின் மாத்யூ ஹைடன் கூறுகையில், ''குஜராத் அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. குறிப்பாக 'டாப்-ஆர்டர்' வலுவாக உள்ளது. இதனால் இமாலய ஸ்கோரை பெற முடிகிறது. எங்கள் அணியில் ரபாடா, சிராஜ், ரஷித் கான், ஜேசன் ஹோல்டர், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் என, சிறந்த பவுலர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு பவுலரும், தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துகின்றனர். குஜராத் அணி சரியான நேரத்தில் எழுச்சி கண்டுள்ளது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us