/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பைனலில் தென் ஆப்ரிக்கா: பெண்கள் உலக கோப்பையில்
/
பைனலில் தென் ஆப்ரிக்கா: பெண்கள் உலக கோப்பையில்
ADDED : அக் 29, 2025 10:29 PM

கவுகாத்தி: உலக கோப்பை பைனலுக்கு தென் ஆப்ரிக்க அணி முன்னேறியது. அரையிறுதியில் 125 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
அசாமின் கவுகாத்தியில் நடந்த பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் நாட் சிவர்-புருன்ட், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
தென் ஆப்ரிக்க அணிக்கு தஸ்னிம் பிரிட்ஸ் (45), மரிஜானே காப் (42) கைகொடுத்தனர். தனிநபராக அசத்திய கேப்டன் லாரா வோல்வார்ட் (169), ஒருநாள் போட்டி அரங்கில் தனது 10வது சதத்தை பதிவு செய்தார். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில், 319/7 ரன் எடுத்தது. டிரையான் (33*), நாடின் டி கிளார்க் (11*) அவுட்டாகாமல் இருந்தனர்.
கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு அமி ஜோன்ஸ் (0), டாமி பியூமன்ட் (0), ஹீதர் நைட் (0) ஏமாற்றினர். பின் இணைந்த கேப்டன் நாட் சிவர்-புருன்ட் (64), ஆலிஸ் கேப்ஸி (50) அரைசதம் விளாசினர். வியாட்-ஹாட்ஸ் (34) ஆறுதல் தந்தார். இங்கிலாந்து அணி 42.3 ஓவரில் 194 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் மரிஜானே காப் 5 விக்கெட் கைப்பற்றினார்.
தென் ஆப்ரிக்க பெண்கள் அணி முதன்முறையாக உலக கோப்பை பைனலுக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்தது. இதற்கு முன், 3 முறை (2000, 2017, 2022) அரையிறுதி வரை சென்றிருந்தது. ஒட்டுமொத்த உலக கோப்பை அரங்கில் தென் ஆப்ரிக்க பெண்கள் அணி, தொடர்ச்சியாக 3வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. கடந்த 2023, 2024ல் 'டி-20' உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது.

