ADDED : நவ 24, 2026 09:50 PM

செஞ்சுரியன்: செஞ்சுரியன் டெஸ்டில் தென் ஆப்ரிக்காவின் ஆக்கர்மென் சதம் அடித்தார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது. நேற்று, 2வது டெஸ்ட் செஞ்சுரியனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 91 ரன்னில் சுருண்டது. முதல் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 88/1 ரன் எடுத்திருந்தது.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஜுபைர் ஹம்சா 27 ரன்னில் அவுட்டானார். ஒருநாள் போட்டி போல வேகமாக ரன் சேர்த்த ஆக்கர்மென், சதம் விளாசினார். இவர் 138 பந்தில் 150 ரன் எடுத்து ஷோரிபுல் பந்தில் அவுட்டானார். ‘மிடில் ஆர்டரில்’ பிரீட்ஸ்கே (20), ரிக்கிள்டன் (20) நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
அடுத்து இணைந்த டோனி டி ஜோர்ஜி (66), வியான் முல்டர் ஜோடி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 407/6 ரன் எடுத்து, 316 ரன் முன்னிலை பெற்றிருந்தது. அரைசதம் அடித்த முல்டர் (64), யான்சென் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
137 பந்து
டெஸ்டில் அதிவேகமாக 150 ரன் எடுத்த தென் ஆப்ரிக்க வீரர்களில் முதலிடம் பிடித்தார் ஆக்கர்மென் (137 பந்து). அடுத்த மூன்று இடத்தில் பிரிட்டோரியஸ் (157 பந்து, 2025), ஆக்கர்மென் (160, 2026), டிவிலியர்ஸ் (162, 2012) உள்ளனர்.
